Bigg Boss Tamil Season 8: வெடித்த சண்டை.. ராணவ்வை அடிக்க பாய்ந்த செளந்தர்யா.. வைரலாகும் வீடியோ..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ டாஸ்க்கின் போது ராணவ் உடன் செளந்தர்யா, ஜாக்குலின் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நவம்பர் 28, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 42 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, ஷிவ குமார், சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Jailer 2 Update: ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பு; ரஜினி ரசிகர்களுக்கு தயாராகும் இன்ப அதிர்ச்சி.!
நீயும் பொம்மை நானும் பொம்மை: பிக் பாஸில் இந்த வாரம், நானும் பொம்மை, நீயும் பொம்மை என்கிற டாஸ்க் நடத்தப்படுகிறது. இந்த டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்தே சண்டையாக உள்ளது. இந்த நிலையில் இந்த கேமில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களும் தாங்கள் வெளியேற்ற நினைக்கு போட்டியாளரின் பொம்மை உள்ளே செல்ல விடாமல் தடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ராணவ்வின் பொம்மையை ரயான், ஜெஃப்ரி ஆகியோர் எடுத்து வைத்துக் கொள்ள, அவர்களிடம் மல்லுக்கட்டி அந்த பொம்மையை வாங்க முயற்சித்திருக்கிறார் ராணவ். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ரயான், ராணவ்வை அடிக்க பாய்ந்த வீடியோ காலையில் வெளியானது.
ரயானுக்கு சப்போர்ட்டாக ஜாக்குலின் சண்டைபோட, அவர் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி திட்டி இருக்கிறார். இதனால் கடுப்பான ஜாக்குலின் மற்றும் செளந்தர்யா, ராணவ்விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எப்படி நீ வாய மூடுனு சொல்லுவ, மரியாதையா பேச கத்துக்கோ என சொல்ல, அதற்கு ராணவ், செளந்தர்யா முடியை தூக்கி போடுவதை போல் செய்து காட்டி, நீ மரியாதை கொடு என சொல்கிறார். உடனே டென்ஷன் ஆன செளந்தர்யா நான் அப்படி தான் டா பண்ணுவேன் என எகிற, மறுபுறம் இப்படி கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லாத என ஜாக்குலின் சொன்னதும் அதற்கு ராணவ் மன்னிப்பு கேட்கிறார். அதை ஏற்க மறுக்கும் ஜாக்குலின் நானும் உன்னை பளார்னு அரைஞ்சிட்டு மன்னிப்பு கேட்கவா என பதிலடி கொடுக்கிறார்.
பிக் பாஸ் ப்ரோமோ:
(The above story first appeared on LatestLY on Nov 28, 2024 03:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

