Shaktimaan Teaser: 90ஸ் கிட்ஸின் பேவரைட்ஸ் சக்திமான்.. மீண்டும் ஒளிபரப்பு - வெளியான டீசர்.!
சக்திமான் தொடரானது ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக முகேஷ் கண்ணா அறிவித்துள்ளார்.
நவம்பர் 12, சென்னை (Cinema News): 1997ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பாகி குழந்தைகளிடம் பிரபலமானத் தொடர் சக்திமான். 90ஸ் கிட்ஸின் பேவரைட்ஸ் சூப்பர் ஹீரோ சக்திமான் தான். 1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடரை எளிதில் மறக்க முடியாது. பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி எனப்படும் சக்திமான் கேரக்டரில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். Bigg Boss Tamil Season 8: "அய்யோ மறுபடியும் ஸ்கூல் டாஸ்கா?" பிக் பாஸ் தமிழ் சீசனின் புதிய ப்ரோமோ.!
சக்திமான் டீசர்: இந்த தொடரின் வரவேற்பையடுத்து, சினிமா திரைப்படமாக உருவாக்க இருப்பதாக சமீபத்தில் முகேஷ் கன்னா தெரிவித்திருந்தார். அதன்படி, ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் உருவாக இருப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில், இப்படத்தின் டீசரை முகேஷ் கன்னா தற்போது வெளியிட்டுள்ளார். புதிய டீசரை வெளியிட்டு ‘இந்தியாவின் முதல் சூப்பர் டீச்சர், சூப்பர் ஹீரோ மீண்டும் வருவதற்கான நேரம்”எனக் கூறியுள்ளார். 'சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மூன்று பாகங்களாக வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்திமான் டீசர்:
(The above story first appeared on LatestLY on Nov 12, 2024 07:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

