Comedian Lollu Sabha Seshu Passes Away: நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..!

தனியார் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

Lollu Sabha Seshu (Photo Credit @moviecrackRR X)

மார்ச் 26, சென்னை (Cinema News): பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ (Lollu Sabha Seshu) இன்று காலமானார். அவருக்கு வயது 60. சேஷூவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார். Mysterious Hat Mother of Tiruvannamalai: ஆச்சரியப்படுத்தும் தொப்பி அம்மா.. சாப்பிட்டு வீசிய உணவுப் பொருளை பிரசாதமாக கொண்டாடும் பக்தர்கள்..!

சின்னத்திரையில் நடித்துக் கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய சேஷூ, 'தளபதி' விஜய் நடித்த வேலாயுதம் (2011) போன்ற படங்களிலும், சந்தானத்துடன் ஏ1 (2019), பாரிஸ் ஜெயராஜ் (2021), டிக்கிலூனா (2021), டிக்கிலூனா ( 2021), குலு குலு (2022), 80களின் பில்டப் (2023) போன்ற பல படங்களில் நடித்தார். அவர் கடைசியாக சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement