Kanguva (Photo Credit: LatestLY)

நவம்பர் 14, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா படமாக மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள சூர்யாவின் “கங்குவா” (Kanguva) திரைப்படம் இன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன்ஸ் கே.ஈ.ஞானவேல் ராஜா இயக்கியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் பிரபலங்கள் பாபி தியோல் மற்றும் திஷா படானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு என மொத்தம் 8 மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இப்படம் முன்பதிவில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி மிரளவைத்தது குறிப்பிடத்தக்கது.

கங்குவா: கொரோனாவுக்கு பின் கடந்த 980 நாட்களில் சூர்யா படம் ஒன்று கூட திரையரங்கில் வெளிவராமல் இருந்து வரும் நிலையில், நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் தற்போது ‘கங்குவா’ வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். கேரளா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலங்களிலும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் கங்குவா படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில், கங்குவா ரசிகர்களின் மனதை வென்றானா? என்பதைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

கதைக்களம்: கங்குவா படமானது இரண்டு நூற்றாண்டினை மையமாகக் கொண்டு செல்கிறது. அதாவது 1070 காலக்கட்டம், 2024 காலக்கட்டம் என்று மாறி மாறி செல்கிறது. நிகழ்காலத்தில் இருக்கும் சூர்யாவிற்கு பிரான்சிஸ்க்கு ஜூனாவால் தான் யாரென்று தெரிய வருகிறது. அங்கு தான் கங்கவாவின் கதை ஆரம்பிக்கிறது. அதாவது படமானது ஆயிரம் நூற்றாண்டு பின்னோக்கி செல்கிறது. மொத்தம் ஐந்து தீவுகள் இருக்கக்கூடிய ஒரு இடத்திற்கு நம்மை அழைத்து செல்கின்றனர். அங்குள்ள பெரும்மாச்சி தீவின் ஆதர்ச நாயகன் தான் கங்குவா. கங்குவாவிற்கும் அவனது குழுவிற்கும் குலத்தொழில் என்பது போர். இந்நிலையில் கங்குவாவின் நாட்டை வசப்படுத்த ரோமானிய அரசு நினைக்கிறது. Amaran OTT Release: அமரன் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறதா? விபரம் உள்ளே..!

பணத்தாசைக்காக பெரும்மாச்சி இன மக்களை நம்ப வைத்து, கொடுவா என்பவன் ஏமாற்றுகிறான். இதனால் கடுப்பான கங்குவாவும் அவனது இனமும் அவனது குடும்பத்தை தீ வைத்து கொளுத்துகிறது. தொடர்ந்து கொடுவாவின் குடும்பத்தையும் கொல்ல வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். அதற்கு கங்குவா எதிர்ப்பு தெரிவிக்கின்றான். தொடர்ந்து கொடுவாவின் மனைவி உடன் கட்டை ஏறுகிறாள். அதற்கு முன் அவளின் குழந்தையை "இனி இவன் உன் மகன்" என்று கங்குவாவிடம் ஒப்படைக்கிறாள். அதன் பின் கதை போருக்கு எப்படி செல்கிறது? அப்பாவை கொன்ற கங்குவாவை கொல்லத் துடிக்கும் கொடுவா மகனின் பகை என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கான பதிலே இப்படம்.

ப்ளஸ்: இரண்டு வித்தியாசமான காலகட்டங்களை சேர்ந்தவராக அற்புதமாக நடித்திருக்கிறார் சூர்யா. அவரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது. சண்டை காட்சிகள் வித்தியாசமாக இருக்கிறது. 1070ல் இருக்கும் பெண்கள் எதிரிகளை தாக்குவது, பாம்புகள், தேள்கள் கொண்ட காட்சிகள் தனித்து தெரிகிறது. 3டியில் பாரக்கும்போது போர்க்களத்தில் நாமே இருப்பது போன்ற உணர்வு கிடைக்கிறது. விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரமாண்டமாக இருக்கிறது. 1070ஐ காட்டும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. படத்தில் மிகவும் ஹைலைட்டாக இருப்பது தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தான். மேக்கப், ஆர்ட் ஒர்க், சண்டைக்காட்சிகள் ஆகியவை அருமையாக உள்ளது. படத்தில் சர்ப்ரைஸான சில கேமியோக்கள் உள்ளது.

மைனஸ்: திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம். திடீரென்று எந்த தொடர்பும் இல்லாமல் கோவாவில் நடக்கும் பார்ட்டியில் இருந்து பழங்கால கிராமத்தில் நடக்கும் போருக்கு படம் செல்கிறது. காமெடி காட்சிகள் இருக்கிறது. அதை பார்த்து சிரிப்பு வரவில்லை. கிரிஞ்ச் ஆக உள்ளது. பழங்காலத்து சூர்யாவின் கிராமத்தில் இருக்கும் சடங்குகள், ஆயுதங்கள், பிரார்த்தனை செய்யும்போது ஆயுதங்களை பயன்படுத்தாமல் இருப்பது ஆகியவற்றை அழகாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் வேக வேகமாக வந்து போகிறது. கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கும் அளவு காட்சிப்படுத்தப்படவில்லை. அழுத்தமான காட்சி இல்லாதது படத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு.

கங்குவா படமானது 2000 கோடி வசூல் செய்யும் என்ற ஞானவேல் ராஜா ஒரு பக்கமும் இந்த படம் தமிழ் சினிமாவிலேயே சிறந்த படமாக வந்துள்ளது என்று சூர்யா ஒரு பக்கமும் பேசிய நிலையில் படமானது சந்திரமுகி இரண்டினை விட மோசமாக உள்ளது என படத்தினை பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். மொத்தத்தில் கங்குவா படத்தில் அநாவிசயமாக பல விஷயங்களை புகுத்தாமல், ஒரு நூற்றாண்டை மட்டும் சரிவர எடுத்திருந்தால் பாகுபலியாக ஜொலித்திருக்கும். தவற விட்டதால் சுவாரசியம் குறைந்த சிவா சூர்யாவை வைத்து செய்த சம்பவமாகவே இப்படம் உள்ளது.