Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுக்கு ஆப்பு வைத்த சவுண்ட்.. சகுனி விளையாட்டு ஆரம்பம்.!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 16ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
டிசம்பர் 16, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே. ஆனந்தி, சாச்சனா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது, வீட்டிற்குள் இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தர்ஷிகா, சத்யா இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Dropped Films In Tamil cinema: தமிழ்த் திரை நட்சத்திரங்களால் கைவிடப்பட்ட முக்கிய படங்கள்.. ரஜினி முதல் சூர்யா வரை.. லிஸ்ட் இதோ.!
இந்நிலையில் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். இந்த வாரத்திற்கான நாமினேஷனும் நடைபெற்றுள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களைக் கூறி நாமினேஷன் செய்துள்ள நிலையில், சௌந்தர்யா ஜாக்குலினை நாமினேஷன் செய்துள்ளார். மேலும், நாமினேஷனில் முத்துக்குமரன், ஜாக்லின், பவித்ரா, அருண், ரஞ்சித், தீபக், மஞ்சரி, சௌந்தர்யா, அன்சிதா, ராணவ், ராயன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் யார் வெளியே போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ:
(The above story first appeared on LatestLY on Dec 16, 2024 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

