Dropped film (Photo Credit: Wikipedia Commons)

டிசம்பர் 16, மும்பை (Cinema News): முன்பெல்லாம் தமிழ் படங்கள் 10 வெளியானால் அதில் எப்படியாவது 5 க்கு மேற்பட்ட படங்கள் ஹிட்டுதான். ஏனெனில் அது பெரிய ஹீரோக்களின் படங்களாக இருக்கும். அவர்கள் நடித்தாலே ஹிட்டு தான் என எண்ணும் ஹீரோக்களால் கைவிடப்பட்ட படங்களை (Dropped Films) பார்க்கலாம்.

ரஜினிகாந்த்:

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ராணா மற்றும் ஜக்குபாய் என்ற படங்கள் இயக்க இருந்தது. சரித்திர படமாகி வெளி வர வேண்டிய ராணா திரைப்படத்தில் திபிகா படுகோன் நடித்திருந்தார். ரஜினியின் உடல் நலம் காரணமாக இப்படம் கைவிடப்பட்டது. ’ஜக்குபாய்’ கதையின் கருத்து வேறுபாட்டால் இது நிறுத்தப்பட்டது. இதேபோல் கதை கருத்து காரணமாக ஆர்.வி.உதயகுமாருடனான ஜில்லா கலெக்டர் என்னும் படமும் கைவிடப்பட்டது.

உலக நாயகன் கமல்ஹாசன்:

கமல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும் எதிர்பார்க்கபட்ட ‘மருதுநாயகம்’ திரைப்படம் 30% படபிடிப்பு நிறைவடைந்திருந்த நிலையில் நிதிபற்றாக் குறையால் இப்படம் கைவிடப்பட்டது. இன்றளவும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு குறையவில்லை என்பதை அனைவரும் அறிவர். மருதுநாயகம் என்னும் யூசஃப் கானின் வாழ்கை வரலாற்றைக் கதையாகக் கொண்டது இப்படம். மேலும் மர்மயோகி மற்றும் தலைவன் இருக்கின்றான் என்னும் படங்களும் பட்ஜெட் மற்றும் பல காரணங்களால் கைவிடப்பட்டது. Zakir Hussain: பிரபல இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்; சோகத்தில் ரசிகர்கள், திரையுலகினர்.!

தளபதி விஜய்:

ஸ்பை திரில்லர் படமாக கௌதம் வாசுதேவ் மேனனால் இயக்க இருந்த படமான யோகன் அத்தியாயம் ஒன்று என்னும் திரைப்படம் கதையின் கருத்து வேறுபாட்டின் காரணமாக கைவிடப்பட்டது. இப்படம் வெளியாகி இருந்திருந்தால் இதுவே இவர்களின் முதல் காம்போ திரைப்படமாகியிருக்கும்.

அஜித்:

சுஜாதாவின் கதையை தழுவி, சரவண சுப்பையாவால் அஜித்தை வைத்து இயக்கபோவதாக செய்திதாளில் வெளியாகி கிடப்பில் போடப்பட்ட திரைப்படம் ‘இதிகாசம்’. அஜித்தின் கார் ரேஸ், இதர படங்கள் போன்ற பிஸி செடியூலால் கைவிடப்பட்ட படம் ராதாரவி இயக்கவிருந்த ’மஹா’. மேலும் போஸ்ட்டர் வெளியாகி அதிக ஆர்வத்தை தூண்டிய ’மிரட்டல்’ படமும் அஜித்தால் கைவிடப்பட்டது.

சிம்பு:

சிம்பு, அசின் ஆகியோரை வைத்து எஸ்.ஜே. சூரியா இயக்க திட்டமிட்டிருந்த படம் ‘ஏசி’. இத்திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டுகள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றன. அறியப்படாத காரங்களுக்காக இப்படம் கைவிடப்பட்டது. செல்வராகவன் சிம்பு கூட்டனியில் வந்திருக்க வேண்டிய திரைப்படம் ‘கான்’. வேகமாக ஆரம்பித்த திரைப்படம் அதே வேகத்தில் கிடப்பிற்கு சென்றது. இருவரும் ஒரு நேர்காணலில் இப்படம் திரும்ப வரும் என கூறியிருக்கிறார்கள். வேட்டைமன்னன், வாலிபன் கெட்டவன் போன்ற படங்களும் சிம்புவால் கைவிடப்பட்ட படங்கள்.

தனுஷ்:

தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை வைத்து செல்வராகவன் இயக்கவிருந்த படம் ’டாக்டர்ஸ்’ பின் காதல் கொண்டேன் வெற்றியாலும் சில அறியப்படாதா காரணத்தாலும் இப்படம் கைவிட்டப்பட்டதாம்.

சூர்யா:

கௌதம் வாசுதேவ் மேனனால், கஜினி திரைப்படத்திற்கு முன்னால் சூரியா, அசின் வைத்து ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ என்னும் திரைப்படத்தை இயக்கவிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியிருந்தார். இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது சில காரணத்தால் கைவிடப்பட்டதை அடுத்து தான் சூர்யா, ஹாரிஸ், கௌதம் காம்பினேஷனில் ’வாரணமாயிரம்’ வெளிவந்தது.