Panchayat Remake In Tamil: பஞ்சாயத்து வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?!
இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பஞ்சாயத்து' நகைச்சுவை தொடரின் தமிழ் ரீமேக்கான 'தலைவெட்டியான் பாளையம்' அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
செப்டம்பர் 13, சென்னை (Cinema News): அமேசான் ப்ரைமில் வெளியாகி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற தொடர்களில் ஒன்று பஞ்சாயத்து (Panchayat). அந்த தொடரின் 3 சீசன்கள் இதுவரை வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்நுழையாத கிராமத்தில் ஒரு அரசு அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நகைச்சுவை கலந்து சொல்வதே இந்த சீரிஸின் பலம். இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த நகைச்சுவை தொடரின் தமிழ் ரீமேக்கான 'தலைவெட்டியான் பாளையம்' () வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. Thalapathy 69: "லாஸ்ட் டான்ஸ் ஆஃப் தளபதி" நடிகர் விஜய்யின் அடுத்த & இறுதி படம்.. தளபதி 69 படத்தின் அப்டேட்..!
பஞ்சாயத்து: மொத்தமாக 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில், அபிஷேக் குமார், சேத்தன், தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பால குமாரன் முருகேசன் எழுத்தில், நாகா இயக்கியுள்ள இந்தத் தொடரை தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்துள்ளது. தனது சொந்த ஊரிலிருந்து வந்து தலைவெட்டியான் பாளையம் என்ற கிராமத்தில் பணிக்கு சேர்கிறார் (அபிஷேக் குமார்). அந்த கிராமவாசிகளுக்கும், சித்தார்த்துக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக காட்சிப்படுத்துகிறது இந்தத் தொடர்.
தலைவெட்டியான் பாளையம்:
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

