Junior Mehmood Dies at 67: பழம்பெரும் திரைப்பட இயக்குனர், நடிகர், பாடகர் புற்றுநோயால் காலமானார்: திரையுலகினர் சோகம்.!

7 மொழிகளில் வெளியான 265 திரைப்படங்களில் நடித்த மூத்த நடிகர், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, அவரை இறைவன் ஆட்கொண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Junior Mehmood Dies at 67: பழம்பெரும் திரைப்பட இயக்குனர், நடிகர், பாடகர் புற்றுநோயால் காலமானார்: திரையுலகினர் சோகம்.!
Veteran Actor Junior Mehmood (Photo Credit: @LatestLY X)

டிசம்பர் 08, மும்பை (Mumbai): பிரபல மராத்தி திரைப்பட இயக்குனர், பாடகர், இந்திய நடிகர் என பன்முகங்களில் கொண்டவர் ஜூனியர் மெக்மூத். இவரின் இயற்பெயர் நயீம் சையத் (Singer Naeem Sayyed). மராட்டிய மொழியில் வெளியான 6 படங்களை தயாரித்து, இயக்கியும் வழங்கியுள்ளார்.

1967ல் தொடங்கிய திரை வாழ்க்கை: மராட்டிய மொழி மட்டுமல்லாது 7 மொழிகளில் வெளியான 265 திரைப்படங்களில் நடித்த மெக்மூத்தின் திரை வாழ்க்கையானது, கடந்த 1967 ஆம் ஆண்டு தொடங்கியது. பின் 2019 வரை எவ்வித பிரச்சனையும் இன்றி தொடர்ந்தது.

புற்றுநோய் உறுதி: அச்சமயம், மெக்மூத்க்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை எடுத்து வந்த மெக்மூத், நான்காம் கட்ட தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். School Holiday: தலைநகரில் தொடரும் மீட்புப்பணிகள்: சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! 

இயற்கையாக பிரிந்த உயிர்: கடந்த சில நாட்களாகவே அவருக்கு உடல்நலம் குன்றவே, நேற்று தனது வீட்டிலேயே இயற்கையாக உயிரிழந்தார். இவரது மறைவு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திரையுலகினர் பலரும் சோகமடைந்து, தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இன்று இறுதிச்சடங்கு: 67 வயதில் தனது மறைவை எட்டியுள்ள மெக்மூத்தின் இறுதிச்சடங்கு, இன்று மதியம் 12 மணியளவில் மும்பை சாண்டா குரூஸ் பகுதியில் இருக்கும் மசூதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Dec 08, 2023 08:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).