Chennai Floods 2023 (Photo Credit: @PTI X)

டிசம்பர் 07, சென்னை (Chennai): கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் உள்ள மசூலிப்பட்டினம் - நெல்லூர் இடையே கரையை கடந்த மிக்ஜாங் புயலானது, தனது கோரத்தாண்டவத்தை ஏற்படுத்தியது. புயல் கொடுக்கும் மேகங்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சூழ்ந்துகொண்டது. இது 49 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவை சென்னைக்கு தந்தது.

விடியலை கண்ட மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: இதனால் மூன்று நாட்களாக தொடர்ந்து சென்னையில் பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகின. 4ம் தேதி பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் குறைய தொடங்கினாலும், 5ம் தேதியே விடியல் என்பது ஏற்பட்டது. ஆனால், அப்போதுதான் சென்னையில் புயல் கோரத்தாண்டவம் ஆடியது தெரியவந்தது.

சென்னை சூழ்ந்த வெள்ளம்: நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து, பள்ளிக்கரணை பகுதியில் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனையடுத்து, தொடர்ந்து 3 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டு கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. Mumbai Cop Fine Allegation: தனக்கு வேண்டுமென்றே அபராதம் விதித்ததாக அலைமோதிய இளைஞர்: ஆதாரத்துடன் ஆப்படித்த மும்பை காவல்துறை.! 

Chennai Floods 2023 (Photo Credit: @ANI X)

தொடரும் மீட்பு பணிகள்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பணியாளர்களும், தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர், மீட்பு பணிகள் தொடருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதி, கடந்த நான்கு நாட்களாக தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

தேர்வு தேதிகள் மாற்றம்: இந்த நிலையில், சென்னையில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெறவிருந்த 11ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டிருந்தன.

பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தொடர்ந்து, தற்போது நாளையும் சென்னையில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிற மாவட்டங்களில் மழைப்பொழிவை பொறுத்து ஆட்சியர்கள் நாளை விடுமுறை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை: சென்னை நகரில் முடிச்சூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை உட்பட சில இடங்களில் தேங்கியுள்ள நீரும் போர்க்கால அடிப்படையில் வெளியேற்றப்படுகின்றன. நகரின் முக்கிய வழித்தடங்களில் தேங்கியிருந்த நீர் அகற்றப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையிலான ஏற்பாடுகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.