Venkatraman: பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் ஆகாசவாணி வெங்கட்ராமன் மறைந்தார்: 102 வயதில் பிரிந்த உயிர்.!
ஆகாசவாணியின் மூத்த செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் சென்னையில் காலமானார்.
பிப்ரவரி 05, சென்னை (Chennai News): ஆகாஷவாணி செய்திகள் வாசிப்பது என்று குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளை கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான அகில இந்திய வானொலியின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். 1923-ஆம் ஆண்டு ஜூன் மாதம், மும்பை ரேடியோ சங்கம் என்ற அமைப்புதான், நாட்டில் முதன்முதலாக வானொலி ஒலிபரப்பை தொடங்கியது. Raj Tarun-Lavanya Case: 200க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்கள்.. பெண்களை மிரட்டிய யூடியூபர் மஸ்தான் சாய் கைது.!
செய்தி வாசிப்பாளர் ஆகாசவாணி வெங்கட்ராமன் மறைவு (Venkatraman passes away):
இந்நிலையில் பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் ஆகாசவாணி வெங்கட்ராமன் மறைந்தார். தமிழகத்தின் மன்னார்குடி அருகே உள்ள ராதா நரசிம்மபுரத்தினை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி டெல்லியில் ஆகாஷ்வாணியின் தமிழ் செய்தி பிரிவில் செய்தி வாசிக்கும் பணியை தொடங்கினார். 1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது அது குறித்த செய்தியினை வாசித்தவரும் இவர்தான். இவர் ஆகாஷ்வாணியில் இருந்து 1985 ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்றார். தொடர்ந்து வயது மூப்பின் காரணமாக இன்று சென்னையில் காலமடைந்தார். இவருக்கு ஊடகவியலாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

