Mastan Sai Arrested (Photo Credit: Facebook)

பிப்ரவரி 04, திருமலை (Cinema News): தெலுங்கு திரையுலகில் பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் ஹீரோ ராஜ் தருண். இவர் மீது ஐதராபாத்தை சேர்ந்த லாவண்யா என்ற இளம்பெண் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் மனு அளித்தார்.

லாவண்யா புகார் (Lavanya Chowdary-Raj Tarun Controversy):

அந்த புகாரில், நடிகர் ராஜ் தருண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, உடல் ரீதியாக பயன்படுத்தினார். அதன்பின்னர் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தோம். இந்நிலையில் ராஜ் தருண் தனது படத்தில் நடிக்கும் கதாநாயகியுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை விட்டு பிரிந்து விட்டார். 3 மாதங்களுக்கு முன்பு ராஜ் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூரில் தங்கி உள்ளார். தன்னை கைவிடாவிட்டால் கொலை செய்து உடல் இருக்கும் இடம் கூட தெரியாமல் அழித்து விடுவதாக மிரட்டுகிறார். இவ்வாறு கூறப்பட்டது. Grammy Awards 2025: 67வது கிராமி விருது.. வெற்றியாளர்களின் முழுப்பட்டியல் உள்ளே.!

யூடியூபர் மஸ்தான் சாய் கைது (YouTuber Mastan Sai Arrested):

தனது புகாரில், ராஜ் தருணிடமிருந்து பிரிந்ததற்கு யூடியூபர் மஸ்தான் சாய் தான் காரணம் என்று லாவண்யா குற்றம் சாட்டினார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், மஸ்தான் சாயையும் கைது செய்தனர். தொடர்ந்து, லாவண்யா தனது புகாரில் மஸ்தான் சாய் மீது சில பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். ஹீரோ நிகில் மற்றும் வரலட்சுமி டிஃபின்ஸ் சென்டர் உரிமையாளர் பிரபாகர் ரெட்டி ஆகியோரின் அந்தரங்க வீடியோக்களை சாய் வைத்திருந்ததாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், சாய் நூற்றுக்கணக்கான பெண்களுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை சட்டவிரோதமாக வைத்திருப்பதாகவும் வீடியோக்களைப் பயன்படுத்தி பெண்களை மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து மஸ்தான் சாயின் ஹார்ட் டிரைவில் 200க்கும் மேற்பட்ட தனிப்பட்ட வீடியோக்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் மஸ்தான் சாய் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094.

சைபர் க்ரைம் (Cyber Crime) தொடர்பான விவகாரங்களுக்கு புகார் அளிக்க: 1930