Arnav Wild Card Entry? பிக் பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் அர்னவ்? இந்த வாரம் டபுள் சம்பவம்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பல பஞ்சாயத்துகளுடன் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறி வந்த அர்னவ், வனிதாவிடம் செம்மையாக வாங்கிக்கட்டிய நிலையில், தற்போது மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக வீட்டிற்குள் செல்லலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

Arnav Wild Card Entry? பிக் பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் அர்னவ்? இந்த வாரம் டபுள் சம்பவம்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
Arnav | Bigg Boss Tamil Season 8 (Photo Credit: @_thecurious1 / @Bigbosstamil23 X)

நவம்பர் 23, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 7 சீசன்களை நிறைவு செய்த பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil), தற்போது 8 வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனில் பிக் பாஸ் இல்லத்திற்குள் ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, ஷிவ குமார், சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டில் இருந்தவர்களில் ரவீந்தர், அர்னவ், தர்ஷிகா, சுனிதா, ரியா ஆகியோர் வீட்டில் இருந்து எவிக்சன் முறையில் வெளியேற்றப்பட்டனர். வார இறுதியான இன்று அல்லது நாளை ஒன்று அல்லது இரண்டு போட்டியாளர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Bigg Boss: பிக் பாஸ் பார்ப்பது நல்லதா? கெட்டதா? - வெளியான ஆய்வு முடிவு..! 

அர்னவ் வைல்ட் கார்ட் என்ட்ரி?

இந்நிலையில், பிக் பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்சன் முறையில் வெளியேற்றப்பட்ட அர்னவ், மீண்டும் பிக் பாஸ் இல்லத்திற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்னவ் குறித்து சில செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதை உறுதி செய்வதைப்போல, அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் வைல்ட் கார்ட் குறித்த கேள்வியுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

சிக்கலில் ஆண்கள் அணி:

இதனால் அர்னவ் இன்று அல்லது நாளை மீண்டும் பிக் பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அர்னவ் தனது ஸ்டோரியில், தான் வெளியே வரும்போது வன்மத்துடன் டேய் ஜால்ராஸ் என ஆண்கள் அணியை எதிர்நோக்கி எழுப்பிய கேள்வியுடன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும், இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கலாம் எனவும் தெரியவருகிறது. பிக் பாஸ் வீட்டில் ஒருவேளை அர்னவ் மீண்டும் சென்றால், ஆட்டம் வேற லெவலில் சூடுபிடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அர்னவின் என்ட்ரி குறித்து பதிவுகள்:

(The above story first appeared on LatestLY on Nov 23, 2024 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).