Vijay Sethupathi | Bigg Boss Tamil Season 8 (Photo Credit: @VijayTelevision X)

நவம்பர் 22, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். நடிகர் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான். இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார்

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 42 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, ஷிவ குமார், சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் பார்க்கக்கூடாது என்பதற்கான காரணங்கள் குறித்து நிபுணர்கள் ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளனர். Kadhalikka Neramillai First Single: "என்னை இழுக்குதடி.. நெஞ்சம் வழுக்குதடி.." காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் வெளியீடு.!

பிக் பாஸ் பார்க்கக்கூடாது என்பதற்கான காரணங்கள்:

  • பிக் பாஸ் பார்ப்பதினால் உங்களுடைய மன அழுத்தத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். உதாரணமாக, நீதி, நேர்மை என்று பேசுபவர்கள் எலிமினேஷனில் நீக்கப்படுவதும், மோசமாக விளையாடுபவர்கள் வீட்டினுள் இருப்பதும், பார்வையாளர்களுக்கு மன அழுத்தத்தினை ஏற்படுத்தும்.
  • பிக் பாஸ் பார்ப்பது உங்களுக்குள்ளே விஷ குணங்களை ஊக்குவிக்கிறது. தொலைக்காட்சியில் தீமை செய்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும் பொழுது, நாமும் அதனை செய்யலாம் என்ற எண்ணத்தினை உருவாக்குகிறது.
  • பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருபவர்களில் ஒரு சிலர் மட்டுமே நற்குணத்துடன் செயல்படுவதால், நல்ல வழிகாட்டிகள் இல்லாமல் போய்விடும்.
  • பிக் பாஸில் போட்டியாளர்கள் விளையாட்டிற்கு செய்வதை நிஜம் என்று தவறாக புரிந்து கொண்டு நிஜ வாழ்க்கையில் அதனை செயல்படுத்துவோம்.
  • மேலும் தவறான பல விளம்பரங்களை ஊக்குவிக்கும் பிக் பாஸால், நாம் தவறான முடிவுகளை எடுக்கக்கூடும்.
  • பிக் பாஸ் நிகழ்ச்சியை தினமும் ஒரு மணி நேரம் பார்ப்பதினால் உங்கள் நேரம் வீணாகிறது.
  • தேவையற்ற ரசிகர் குழுக்களை உருவாக்குகிறது. இவை அனைத்தும் மக்களை அறியாமையை நோக்கியே அழைத்துச் செல்கிறது.
  • உண்மையான பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திருப்பி, ஒன்றுமில்லாத ஒரு விஷயத்தினை பேச வைக்கிறது.
  • பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே மோசமான சமூகத்திறன்களை உருவாக்குகிறது.
  • கண்காணிப்பு ஆர்வம் என்பது மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் அறியாமலாக கவர்ச்சிகரமான முறையில் பார்ப்பது. இந்தப் பழக்கத்தினை மக்களிடையே ஊக்குவிக்கிறது.