Kingdom Of the Planet of the Apes: "மனிதர்களை அடிமையாக்கி ஆட்சியை பிடிக்கும் மனிதக்குரங்குகள்" அசத்தல் காட்சிகளுடன் வெளியானது கிங்டம் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்.!
மனிதனின் பரிணாம வளர்ச்சி என்பது கட்டாயம் நல்வழியில் பயணித்தால் மட்டுமே எதிர்காலம் சரியாக அமையும். ஆனால், அதன் தடம் மாறினால் என்ன ஆகும் என்பதற்கு சாட்சியாக பல கற்பனை கதைகள் வெளியாகி இருக்கின்றன. அதுபோன்ற படம் ஒன்று ஹாலிவுட்டில் விரைவில் வெளியாகிறது.
பிப்ரவரி 13, கலிபோர்னியா (Cinema News): கடந்த 1968ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான தி பிளானட் ஆப் தி ஏப்ஸ் படத்தை மையமாக கொண்டு, 2024ல் மே மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ள அறிவியல் - ஆக்சன் காட்சிகள் நிறைந்த திரைப்படம் கிங்டம் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ் (Kingdom Of the Planet of the Apes Movie Trailer). இப்படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் ஓவன் டியாகு, பிரேயா ஆலன், கெவின் டூயட், பீட்டர் மெக்கோன், வில்லியம் உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர்.
மிரட்டப்போகும் ஜான் பயெஸ்னோ இசை: 20 த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் உலகளவில் விநியோகம் செய்யவுள்ள இத்திரைப்படம், ஜோஷ் ப்ரீட்மேன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், பேட்ரிக் ஐசன் ஆகியோரின் எழுத்துக்களில் வெஸ் பால் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. மெஸ் ரன்னர் (Maze Runner) படத்திற்கு இசையமைத்து வழங்கிய ஜான் பயெஸ்னோ இப்படத்திற்கு இசையமைத்து வழங்கியுள்ளார். Wedding Fight: திருமண நிகழ்ச்சியில் நடந்த கலவரம்; அடித்து நொறுக்கப்பட்ட நாற்காலிகள்.. களேபரமான கல்யாண வீடு.!
சர்வதேச அளவில் பல மொழிகளில் படம் வெளியாகிறது: ஆஸ்திரேலியா, கலிபோர்னியாவின் ஹாலிவுட் உட்பட பல இடங்களில் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று இருந்தன. மே மாதத்தின் இறுதியில் படம் வெளியாக முதலில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், இறுதியில் மே 10ல் படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டது. உலகளவில் பல மொழிகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு ஆதரவும் வெளியீடு நெருங்கும் நாளில் பெருகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் டிரைலர் நேற்று படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டது. பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரைலர் உங்களின் பார்வைக்கு..
No one can stop the reign.
Watch the brand-new trailer for #KingdomOfThePlanetOfTheApes. Experience it in theaters May 10. pic.twitter.com/8YEjFRQ6WF
— Kingdom of the Planet of the Apes (@ApesMovies) February 11, 2024
(The above story first appeared on LatestLY on Feb 13, 2024 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

