பிப்ரவரி 13, அலிகார்க் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் அலிகார்க் மாவட்டம், புஜேரா பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. அப்போது உறவினர்களுக்கு இடையே காலை உணவு பரிமாறுவது தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதமானது திடீரென கைகலப்பாக மாறி இருக்கிறது. இதனையடுத்து, திருமண வீட்டார் இருதரப்பாக பிரிந்து கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்து எதிர்தரப்பை சேர்ந்த உறவினர்களை அடித்துநொறுக்கினார். Women Died While Paragliding: சேப்டி பெல்ட்டை சரிவர அணியாததால் இளம்பெண்ணுக்கு நடந்த பரிதாபம்; பாராகிளைடிங் பயணம் இறுதிப்பயணமான சோகம்.!
கையில் கிடைப்பதை ஆயுதமாக்கி கல்யாண கலவரம்: பெல்ட், சேர், கட்டை என கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து பெண்கள், ஆண்கள் வித்தியாசமின்றி இருதரப்பு தாக்குதல் நடந்தது. சமாதானம் செய்ய சென்ற பெண்களும் காயம் அடைந்தனர். மணமகன் தரப்பில் பலரும் லேசான காயத்திற்கு உள்ளாகினர். கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இந்த சம்பவம் சஸ்னி கேட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படும் நிலையில், இருதரப்பும் சண்டைக்கு பின் அவர்களாகவே சமாதானம் அடைந்துள்ளனர். இதனால் காவல் நிலையத்தில் புகார் ஏதும் பெறப்படவில்லை. மேற்படி, அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
अलीगढ़ की शादी में "कुर्सी युद्ध" pic.twitter.com/JdG2rnEbZh
— Sachin Gupta (@SachinGuptaUP) February 12, 2024