Yaadhum Ariyaan: முதல்வர் விஜய்.. ஷாக்கான எதிர்க்கட்சிகள்.. படக்குழு சம்பவம்.!

செந்தூரா படத்தின் இயக்குநர் கோபி இயக்கிய யாதும் அறியான் படத்தின் டிரெய்லரில் வெளியான ஒரு காட்சி கவனத்தை பெற்றுள்ளது.

ஜூலை 10, Chennai (Cinema News Tamil): தமிழ் திரையுலகில் அறிமுக நாயகன் தினேஷ், தம்பி ராமையா, அப்புகுட்டி ஆகியோர் நடித்து வெளியாக உள்ள திரில்லர் படம் யாதும் அறியான். இப்படத்தை இயக்குநர் கோபி இயக்கிய நிலையில், பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இப்படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். யாதும் அறியான் திரைப்படத்தை இந்த மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், சமீபத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டது. அதில் 2024 மற்றும் 2026 காலகட்டங்களில் கதை நகர்வது போன்ற காட்சிகள் உருவாகியுள்ளன. Breaking: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. காலையிலேயே பரபரப்பு.! 

ட்ரெய்லரில் இடம்பெற்ற போஸ்டர் :

இந்த நிலையில் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ட்ரெய்லரின் ஒரு காட்சியில் முதல்வர் விஜய் என குறிப்பிடப்பட்டுள்ளது. செய்தி மலர் நாளிதழின் சேலம் பதிப்பு 1.1.2026 புதன்கிழமை என போஸ்டரில் இடம்பெற்று, அதன் கீழ் "தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது.. இளைஞர், பெண்கள், விவசாயிகளுக்கு புது திட்டங்கள்! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு" என குறிப்பிடப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு விஜய் முதலமைச்சராவது போல போஸ்டரில் இடம்பெற்றது கவனத்தை பெற்றுள்ளது

யாதும் அறியான் பட டிரெய்லர் :

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement