ED Raid in Actress House (Photo Credit : @maalaimalar / @News18TamilNadu X)

ஜூலை 09, நீலாங்கரை (Chennai News): தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை அருணா. இவரது கணவர் மன்மோகன் குப்தா. இவர் வீடு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் தொழிலதிபராவார். இதனிடையே மன்மோகன் குப்தாவின் நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இன்று காலையில் இரண்டு கார்களில் வந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், நடிகை அருணா மற்றும் அவரது கணவர் மன்மோகன் குப்தாவின் சொகுசு பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பங்களாவில் அதிரடி சோதனை :

சென்னை நீலாங்கரையில் இருக்கும் பங்களாவில் நடந்துவரும் சோதனையில், இவர்கள் எந்த விதமான சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார்கள்?, அதற்கான ஆவணங்கள் உள்ளதா? என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் ஆவணங்களை ஆராய்ந்து அமலாக்கத்துறை சார்பில் இது தொடர்பாக விளக்கம் அறிக்கையாக கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலையிலேயே நடிகை வீட்டில் அதிரடி சோதனை நடைபெற்று வருவதால் திரையுலகத்தில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது. JustIN: போதைப்பொருள் வழக்கு.. நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்.!

அடுத்தடுத்து பரபரப்பு :

சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று அவர்கள் முன் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனர். தற்போது அமலாக்கத்துறை நடிகை ஒருவரின் வீட்டில் சோதனை செய்வது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.