Suhani Bhatnagar: 19 வயது இளம் நடிகைக்கு இப்படியொரு சோகமா?.. விபத்தில் சிக்கி மருந்து ஒவ்வாமையால் சோகம்.!

மருந்து ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது நடிகை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Suhani Bhatnagar (Photo Credit: @Binged_ X)

பிப்ரவரி 17, டெல்லி (Cinema News): கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உலகளவில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை செய்த திரைப்படம் தங்கல் (Dangal). நிதிஷ் திவாரி இயக்கத்தில், முன்னாள் மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகட் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம், ரூ.2,024 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளையும் பெற்றது, பல விருதுகளை பெற்றது, பன்மொழிகளில் வெளியாகியது.

தங்கல் பட நடிகை: இப்படத்தில் அமீர்கான், பாத்திமா சனா, சுஹானி பாத்நகர், சன்யா மல்கோத்ரா, ஜாயீரா வாசிம், சாக்ஷி தன்வார் உட்பட பலரும் நடித்து இருந்தனர். படத்தில் சுஹானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கடந்த ஆண்டில் விபத்தில் சிக்கிய நடிகை சுஹானி, அதற்கான சிகிச்சை எடுத்தபோது மருந்துகளால் உடல் ஒவ்வாமையை சந்தித்து இருக்கிறார். இதனால் தொடர் உடலநலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. TN Govt Band Cotton Candy: புற்றுநோயை உண்டாக்கும் பஞ்சுமிட்டாய்க்கு தமிழகத்தில் தடை - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! 

உடல்நலக்குறைவால் மரணம்: இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், அமீர்கானின் தங்கல் திரைப்படத்தில் நடித்திருந்த இளம் நடிகை சுஹானி பாத்நகர் (SuhaniBhatnagar) உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் மறைவுக்கு தங்கல் திரைப்பட குழுவும் இரங்கல் தெரிவித்து இருக்கிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement