Teenager Murder: ரயிலில் இருக்கைக்காக தகராறு.. வாலிபரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன்..!

மும்பையில் காட்கோபர் ரயில் நிலையத்தில் இருக்கை தகராறு காரணமாக, 16 வயது சிறுவன் 35 வயது நபரை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Teenager Murder: ரயிலில் இருக்கைக்காக தகராறு.. வாலிபரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன்..!
Knife (Photo Credit: Pixabay)

நவம்பர் 22, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில் (Ghatkopar Railway Station) கடந்த நவம்பர் 15-ஆம் தேதி அன்று உள்ளுர் ரயிலில் இருக்கை பிரச்சனையின் போது, ​​திட்வாலாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் 35 வயது நபரை கத்தியால் குத்திக்கொலை (Murder) செய்தார். கொலைக்கு ஒரு நாள் முன்பு (நவம்பர் 14), இறந்த அங்குஷ் பலேராவ் மற்றும் அவரது நண்பர்கள் ரயிலில் பயணம் செய்யும் போது கிஷோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். Man Dies By Heart Attack: நண்பரின் திருமண விழாவில் நேர்ந்த சோகம்.. வாலிபர் மாரடைப்பால் மரணம்..!

இதனால், பழிவாங்கும் நோக்கில் சம்பவ நாளன்று காலை 10 மணியளவில் பலேராவ் ரயிலில் இருந்து இறங்கி தான் வேலை செய்த மதுக்கடையை நோக்கி செல்ல ஆரம்பித்தார். சிறுவன் ரகசியமாக பின்தொடர்ந்து, பின்னால் இருந்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதன்பிறகு, அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இறுதியாக ரயில்வே நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியைக் கண்டுபிடித்து, கொலை நடந்த 2 நாட்களுக்குப் பிறகு திட்வாலாவிலிருந்து 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றவாளியின் மூத்த சகோதரர் கோவந்தியைச் சேர்ந்த முகமது சனாவுல்லா பைத்தா (வயது 25) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 22, 2024 05:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).