Man Dies By Heart Attack: நண்பரின் திருமண விழாவில் நேர்ந்த சோகம்.. வாலிபர் மாரடைப்பால் மரணம்..!

ஆந்திர பிரதேசத்தில் நண்பரின் திருமண விழாவில் வாலிபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Man Dies By Heart Attack: நண்பரின் திருமண விழாவில் நேர்ந்த சோகம்.. வாலிபர் மாரடைப்பால் மரணம்..!
Man Dies By Heart Attack in AP (Photo Credit: @TeluguScribe X)

நவம்பர் 22, கர்னூல் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், கர்னூல் (Kurnool) மாவட்டத்தில் உள்ள பெனுமடா கிராமத்தில் நண்பரின் திருமண விழாவில் பரிசு வழங்கும்போது வம்சி என்ற வாலிபருக்கு மேடையிலேயே மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டது. நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. Road Accident: விபத்தில் உயிருக்குப் போராடிய நபர்.. காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்..!

நண்பரின் திருமண விழாவில் (Wedding Ceremony) வம்சி என்ற வாலிபர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் அவரை மீட்டு டோன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த வம்சி பெங்களூர் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on Nov 22, 2024 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).