Viral Video: அணையில் குதித்து இளம்பெண் தற்கொலை.. அதிர்ச்சிகர வீடியோ வைரல்..!

உத்தர பிரதேசத்தில் தடுப்பணையில் இருந்து குதித்து 19 வயது இளம்பெண் தற்கொலை (Young Girl Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: அணையில் குதித்து இளம்பெண் தற்கொலை.. அதிர்ச்சிகர வீடியோ வைரல்..!
Young Girl Suicide in UP (Photo Credit: @TrueStoryUP X)

செப்டம்பர் 12, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஹதினிகுண்ட் தடுப்பணையில் இருந்து குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஷிவானி (வயது 19) என்ற கல்லூரி மாணவி, தற்கொலை (Suicide) செய்வதற்கு முன்பு, செல்போனில் யாருடனோ சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்த மக்கள் அவரை தடுக்க முயன்றபோது, ​​யாருடைய பேச்சையும் கேட்காமல், தலையை தாவணியால் மூடிக்கொண்டு தண்ணீரில் குதித்தார். Viral Video: பேருந்து ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் இடையே நடந்த கைகலப்பு.. வீடியோ வைரல்..!

இளம்பெண் தற்கொலை:

இதனையடுத்து, சிலர் அப்பெண்ணை காப்பாற்ற முயன்றனர். ஆனால், நீரோட்டம் வேகமாக இருந்தது. உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உடலை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on Sep 12, 2025 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).