செப்டம்பர் 11, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவின் (Bengaluru) பீன்யா அருகே துமகுரு சாலையில், பிஎம்டிசி பேருந்து ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அடித்துக் கொண்ட வீடியோ வைரலாகி (Video Viral) வருகிறது. வீடியோவில், அப்பெண்ணுக்கும் ஓட்டுநருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் அப்பெண் ஓட்டுநரை அடித்தார். பின் அவரும் பெண்ணை தாக்கினார். இதன்பின்னர் 2-3 பெண்கள் பின்னால் இருந்து வந்து ஓட்டுநரிடம் கோபமாக வாக்குவாதம் செய்யத் தொடங்குகிறார்கள். இந்த மோதலுக்குப் பின்னால் உள்ள சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இச்சம்பவத்தை பேருந்தின் வெளியே நின்ற ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மயக்க ஊசி செலுத்தி இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. லேப் டெக்னீசியன் அதிரடி கைது..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)