செப்டம்பர் 10, ஆந்திரப்பிரதேசம் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயநகரம் பகுதியில் வசித்து வருபவர் விநாயக புருஷோத்தமன். இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில் எம்.டெக் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரிக்கு செல்லாத விநாயக புருஷோத்தமன் கல்லூரி வகுப்புகளை துண்டித்து விட்டு வெளியே சுற்றி வந்துள்ளார். கல்லூரியில் தற்போது தேர்வு நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், வருகைப்பதிவு குறைந்ததால் மாணவர் விநாயகரை ஆசிரியர் தேர்வு எழுத அனுமதி செய்யவில்லை என கூறப்படுகிறது. துப்பாக்கியால் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பரிதாபம்.. 5 வயது சிறுவன் பலி..!
ஆசிரியரை கத்தியால் குத்திய ஐஐஐடி மாணவன் :
நேற்று முன்தினம் தேர்வறையில் கோபால் ராஜ் என்ற பேராசிரியர் கண்காணிப்பாளராக இருந்துள்ளார். அப்போது விநாயக புருஷோத்தமன் தேர்வு எழுத வந்த நிலையில், அவரை நிறுத்திய பேராசிரியர் கல்லூரியின் துணைத்தலைவரை பார்த்துவிட்டு தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தி இருக்கிறார். மாணவர் அவரை கண்டுகொள்ளாமல் தேர்வு மையத்துக்குள் நுழைவதில் குறியாக இருந்ததால் பேராசிரியர் காவலாளியை அழைத்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் விநாயக புருஷோத்தமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பேராசிரியரை சரமாரியாக குத்தினார்.
போலீஸ் விசாரணை :
இந்த சம்பவத்தில் அவருக்கு பலத்த வெட்டு காயம் ஏற்பட்ட நிலையில் ரத்தம் வழிந்தோடியுள்ளது. இதனை தொடர்ந்து அவரை உடனடியாக சக மாணவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அனுமதி செய்தனர். புருஷோத்தமனையும் பிடித்து அடித்து நொறுக்கி கை, கால்களை கட்டி போட்டு வைத்திருந்தனர். பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர்.