செப்டம்பர் 09, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், கோட்புட்லி மாவட்டத்தில் உள்ள சிதௌலி கா பர்தா கிராமத்தை சேர்ந்த தேவன்ஷு (வயது 5) என்ற சிறுவன், நேற்று முன்தினம் (செப்டம்பர் 07) மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியைக் கண்டெடுத்தார். விளையாட்டு பொருளாக துப்பாக்கியை அழுத்தியதில், துப்பாக்கிக் குண்டு அவரது தலையில் பாய்ந்தது. குழந்தை சம்பவ இடத்திலேயே (Child Death) உயிரிழந்தது. 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை.. வாலிபர் கைது..!
சிறுவன் பலி:
உடனே, துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அறைக்கு ஓடிச் சென்று பார்த்தபோது, குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு கதறி அழுதனர். சிறுவனை மீட்டு சாந்த்வாஜியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சிறுவனின் தந்தை முகேஷ் மீது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது தெரியவந்தது. இதனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.