Two Dead Bodies In The Car: காரில் 2 பேர் தோட்டாக் காயங்களுடன் சடலமாக மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை..!

கர்நாடகாவில் 2 பேர் காரில் தோட்டாக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two Dead Bodies In The Car: காரில் 2 பேர் தோட்டாக் காயங்களுடன் சடலமாக மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை..!
Gun File pic (Photo Credit: Pixabay)

ஜூன் 20, ஹாசன் (Karnataka News): கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில், ஹோய்சால நகரில் இன்று காலை (ஜூன் 20) 2 பேர் தோட்டாக் காயங்களுடன் (Bullet Wounds) இறந்து கிடந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இது கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். Private Company Employee Death: சாலையில் சென்ற மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; தனியார் நிறுவன ஊழியர் பலி..!

மேலும், உயிரிழந்தவர்கள் ஹாசனைச் சேர்ந்த ஷரபத் அலி மற்றும் பெங்களூருவை சேர்ந்த ஆசிப் என்றும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். ஹோய்சால நகருக்கு காரில் வந்த இருவரும் அப்பகுதியில் காரை நிறுத்தி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கண்டதாக ஹாசன் காவல்துறை கண்காணிப்பாளர் முகமது சுஜீதா தெரிவித்தார்.

இதனையடுத்து, சற்று நேரத்தில் அருகில் வசிப்பவர்கள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளனர். ஒரு நபர் காருக்கு வெளியே இறந்து கிடந்தார். மற்றவர் காருக்குள் உயிரிழந்துகிடந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jun 20, 2024 06:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).