Private Company Employee Death: சாலையில் சென்ற மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; தனியார் நிறுவன ஊழியர் பலி..!

காஞ்சிபுரத்தில் மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Private Company Employee Death: சாலையில் சென்ற மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; தனியார் நிறுவன ஊழியர் பலி..!
Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 20, மாங்காடு (Kanchipuram News): சென்னையில் உள்ள பூந்தமல்லி, திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 45). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Private Company) பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை மலையம்பாக்கம் அருகே சென்றபோது சாலையில் நின்றுக் கொண்டிருந்த மாட்டின் (Cow) மீது மோதி விபத்துக்குள்ளானது. OnePlus Nord CE 4 Lite 5G: ஒன்பிளஸ் நார்டு சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..! முழு விவரம் உள்ளே..!

இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த மோகனின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால், அவர் மயக்கம்போட்டு கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).