Hyderabad Shocker: விநாயகர் கையில் இருந்த லட்டுவை திருட முயற்சி: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது: ஹைதராபாத்தில் பரபரப்பு சம்பவம்.!

ஹைதராபாத்தின் மன்சூராபாத் பகுதியில், இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில், விநாயகர் பந்தலில் நுழைந்து, சிலையின் கையில் இருக்கும் பெரிய லட்டுவை அபகரிக்க முயற்சித்திருக்கின்றனர்.

Hyderabad Shocker: விநாயகர் கையில் இருந்த லட்டுவை திருட முயற்சி: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது: ஹைதராபாத்தில் பரபரப்பு சம்பவம்.!
4 caught in CCTV footage (Photo Credit: Twitter)

செப்டம்பர் 25, ஹைதராபாத் (Telengana News): தெலுங்கானா (Telengana) மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்(Hyderabad), வசந்தாளிபுரம் (Vasanthalipuram) காவல் நிலையத்துக்கு உட்பட்ட மன்சூராபாத் (Mansoorabad) பகுதியில் விநாயகர் சிலையில் இருக்கும் லட்டுவை திருடியதற்காக இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜி அஜய் மற்றும் பி. மகேஷ் இருவரும் தங்களின் மற்ற இரு நண்பர்களுடன் (சிறுவர்கள்) சேர்ந்து விநாயகர் சிலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய லட்டுவை எடுக்க முயற்சித்திருக்கின்றனர். Delhi Metro Couple Kissing Video: உதட்டோடு உதடு வைத்து.. பொதுமக்கள் முன் அத்துமீறிய காதல் ஜோடி.. டெல்லி மெட்ரோவில் பகீர்.!

அந்த பந்தலில் காவலுக்கு இருந்தவர் அதை பார்த்ததும் அவர்கள் நான்கு பேரும் லட்டுவை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சிசிடிவி பதிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மண்டபத்தின் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் இவர்கள் நான்கு பேரையும் நேற்று கைது செய்திருக்கின்றனர். மேலும் அப்பகுதியில் விநாயகர் பந்தல்களில் காவலை பலப்படுத்த போலீசார் நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி இருக்கின்றனர்.

(The above story first appeared on LatestLY on Sep 25, 2023 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).