செப்டம்பர் 05, பாக்யோங் (Sikkim News): மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெடோங்கில் இருந்து சிக்கிம் மாநிலம், பாக்யோங் (Pakyong) மாவட்டத்தில் உள்ள ஜூலுக் நகருக்கு ராணுவ வாகனம் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தங்கபாண்டி என்பவர் வீரமரணம் அடைந்தார். மற்ற 3 பேரும் மத்திய பிரதேசம், மணிப்பூர், ஹரியானாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வாகனம் (Army Vehicle) சாலையில் இருந்து தவறி 800 அடி பள்ளத்தில் விழுந்தது. Sexual Assault On Tribal Woman: பழங்குடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்.. வெடித்த வன்முறை..!
இதுகுறித்த தகவலின்பேரில் ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்துக்கான (Accident) காரணம் இதுவரை தெரியவில்லை. விபத்தில் உயிரிழந்தவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரதீப் படேல், மணிப்பூரைச் சேர்ந்த டபிள்யூ. பீட்டர், ஹரியானாவைச் சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே. தங்கப்பாண்டி ஆகிய 4 பேர் என அடையாளம் காணப்பட்டனர்.
பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்:
Pakyong, East Sikkim: An army vehicle en route from Jaluk Army Camp to Dalapchand fell 300 feet, killing three personnel on the spot and injuring one. The injured was taken to Rangli Army Hospital pic.twitter.com/ibqmzBm0Ss
— IANS (@ians_india) September 5, 2024