செப்டம்பர் 05, ஆஷிபாபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஆஷிபாபாத் (Asifabad) மாவட்டத்தில் 45 வயதுடைய பழங்குடி பெண் (Tribal Woman) ஒருவர் பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளை நெருப்பு வைத்து கொளுத்தினர். இதனால், அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. எனவே, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். Union Home Secretary: மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு.!
பாலியல் வன்கொடுமை:
இதனிடையே, பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை சார்பில் தெரிவிக்கையில், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சாலையோரம் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்ட போது, ஏதேனும் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. ஆனால், கடந்த செப்டம்பர் 01-ஆம் தேதி அந்தப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
பெண் வாக்குமூலம்:
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மீண்டும் சுயநினைவுக்கு வந்தவுடன், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில், அந்த பெண் கூறுகையில், 'நான் எனது தாயின் சொந்த ஊரான ஜெய்னூருக்கு வேலை விசயமாக சென்றுவிட்டு, ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் ஷேக் முக்தம் என்பவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். மேலும், கட்டையால் என்னை பலமாக தாக்கினார்' என அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர் ஷேக் முக்தம் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் வெடித்த வன்முறை:
More Visuals from #Asifabad's Incident.
Communal tensions flared in #Jainoor mandal, when a 2000-strong mob attacked Muslim-owned properties following the #SexualAssault of a tribal woman by a #Muslim auto rickshaw driver.#Telangana pic.twitter.com/teIQz2HJ9H
— Hyderabad Netizens News (@HYDNetizensNews) September 4, 2024