Family Members Hanging Suicide: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..! அதிர்ச்சி சம்பவம்..!

மத்தியப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Family Members Hanging Suicide: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..! அதிர்ச்சி சம்பவம்..!
Hanging | Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 01, அலிராஜ்பூர் (Madhya Pradesh News): மத்தியப் பிரதேச மாநிலம், அலிராஜ்பூரில் உள்ள ஒரு வீட்டில் 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அலிராஜ்பூர் மாவட்டம், சோண்ட்வா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ரவுடி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராகேஷ், அவரது மனைவி லலிதா மற்றும் 2 மகன்கள் அக்ஷய், பிரகாஷ் மற்றும் ஒரு மகள் லட்சுமி ஆகிய 5 பேரும் தூக்கில் தொங்கிய (Hanging Suicide) நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். Auto Driver Death: ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு; உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்..!

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவர்களின் உறவினர்கள், அவர்கள் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் கடந்த 2018-ஆம் ஆண்டு இதே ஜூலை 01-ஆம் தேதி அன்று, டெல்லியில் உள்ள புராரியில் நடந்த சம்பவத்தை நினைவு கூறுகிறது. அதில், சுண்டாவத் குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், வயதான பாட்டி ஒருவர் மட்டும் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்.

(The above story first appeared on LatestLY on Jul 01, 2024 06:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).