Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 01, நாங்குனேரி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகேயுள்ள பாணாங்குளம் அடுத்த சூரப்பபுரம் கிராமம் அருகே காட்டுப்பகுதியில் ஆட்டோ ஒன்று தனியாக நிற்பதாக பாணாங்குளம் காவல்துறையினருக்கு, இன்று காலையில் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். உடனே, சடலத்தை மீட்ட காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். Chettinad Podalangai Vada Recipe: சுவையான செட்டிநாடு புடலங்காய் வடை செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

இதன் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த வாலிபர் நாங்குநேரி அருகே உள்ள இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்த இராமலிங்கம் என்பவரது மகன் ஆட்டோ ஓட்டுநர் (Auto Driver) முத்து செல்வன் (வயது 29) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவத்தில் உண்மை மறைக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் திருநெல்வேலி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.