Health Effects Of Eating Temple Prasad: கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு நேர்ந்த சோகம்..! 5 பேர் நிலைமை கவலைக்கிடம்..!

கர்நாடகாவில் கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 51 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Health Effects Of Eating Temple Prasad: கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு நேர்ந்த சோகம்..! 5 பேர் நிலைமை கவலைக்கிடம்..!
Vomiting (Photo Credit: Wikipedia)

மே 23, பெலகாவி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், ஹூலிகட்டி கிராமத்தில் மிகவும் புகழ்பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி கோவில் (Temple) உள்ளது. இங்கு, தற்போது உற்சவ திருவிழா நடந்து வருகின்றது. இந்நிலையில், திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை உட்கொண்ட சிலருக்கு வாந்தி (Vomiting), வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.  Buddha Jayanthi Sand Art: புத்தரின் பிறந்தநாளை தனது பாணியில் வரவேற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.!

இதன்காரணமாக, உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் 51 பேர் அருகில் உள்ள சாவதட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதில் 5 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இவர்களை, தார்வாட் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நேரில் சென்று இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற ஹூலிகட்டி கிராமத்திற்கு சென்று, கிராம மக்களின் உடல்நிலையை பரிசோதித்து வருகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on May 23, 2024 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).