மே 23, புவனேஸ்வர் (Odisha News): பௌத்த மதத்தின் திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான புத்தர் பிறந்தநாள் (Buddha Purnima), ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 23ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. இளவரசர் சித்தார்த்த கௌதமராக பிறந்து, பின்னாளில் புத்த மதத்தை நிறுவிய கௌதம புத்தர் கிமு 563-483 ஆண்டுகளில் நேபாளத்தில் பிறந்தார். இந்தியா மட்டுமல்லாது சீனா, கொரியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் வணங்கப்படும் புத்தரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் நாடுகளுக்கிடையே பல வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மே 23 அன்று புத்த பூர்ணிமாவாக (Buddha Purnima) புத்தர் அவதரித்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிறபக்கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்து இருக்கிறார். Kalki 2898 AD Bujji Video Out Now: பிரபாஸின் கல்கி ஏடி 2898 படத்தில் இடம்பெற்ற புஜ்ஜி கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ; மிரளவைக்கும் காட்சிகள்.!
Happy #Buddhapurnima pic.twitter.com/1kcMRa65VV
— Sudarsan Pattnaik (@sudarsansand) May 23, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)