Mumbai Women Killed: 53 வயது பெண்மணியின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு; 2 மாதங்களாக துர்நாற்றம் இல்லை - அதிர்ச்சியில் அதிகாரிகள்.!

தனது அக்காவை இரண்டு மாதமாக காணவில்லை என்று புகார் கொடுத்த தம்பி, காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர் திடீரென மாயமானதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Mumbai Women Killed: 53 வயது பெண்மணியின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு; 2 மாதங்களாக துர்நாற்றம் இல்லை - அதிர்ச்சியில் அதிகாரிகள்.!
Mumbai Lalbhaug area Crime | Visuals from Spot (Photo Credit: ANI)

மார்ச் 15, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை (Lalbhaug, Mumbai), லாலிபானுகு நகரில் வசித்து வரும் பெண்மணி வீணா பிரகாஷ் ஜெயின் (Veena Prakash Jain) (வயது 53). இவரை கடந்த 2 மாதங்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீணாவின் சகோதரர், தனது அக்காவை காணவில்லை என அங்குள்ள கலசௌகி (Kalachowki Police) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

விசாரணையின்போது, பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். Mumbai Cyber Crime: ஆந்திர முதல்வரின் உதவியாளர் என 60 நிறுவனத்திடம் ரூ.3 கோடி மோசடி.. ஆந்திர இளைஞர் அதிரடி கைது..!

இந்த விசாரணைக்கு பின்னர் அதிகாரிகள் வீணா பிரகாஷ் ஜெயினின் 22 வயது மகளை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. அக்கம் பக்கத்தினர் வீணாவை வெளியில் பார்த்து 2 மாதங்கள் ஆகிறது என்று கூறியுள்ளனர்.

பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினர் வீணாவின் சகோதரர் மற்றும் தம்பி மகனையும் தேடி வருகின்றனர். இருவரும் தலைமறைவாகியுள்ளதால் வீணா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

விரிவான விசாரணை பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தபின்னும், எஞ்சிய 2 பேர் கைது செய்யப்பட்டதும் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 22 வயது பெண்ணிடம் விசாரணை தொடருகிறது. 2 மாதங்களாக பொதுமக்களுக்கு எவ்வித துர்நாற்றமும் தெரியவில்லை.

தனது அக்காவை இரண்டு மாதமாக காணவில்லை என்று புகார் கொடுத்த தம்பி, காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர் திடீரென மாயமானதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 15, 2023 03:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).