Fire Accident In Apartment Building: அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து; 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!

மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், உள்ளே சிக்கிக்கொண்ட 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Fire Accident In Apartment Building: அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து; 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!
Fire (Photo Credit: Pixabay)

மே 28, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அப்பகுதியில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தாராவியில் உள்ள காலா கைலா பகுதியில், அசோக் மில் காம்பவுண்டில் உள்ள ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில், இன்று அதிகாலை 3.45 மணி அளவில் திடீரென பயங்கரமான தீ விபத்து (Fire Accident) நிகழ்ந்துள்ளது. Temple Priest Arrested: பெண் பாலியல் விவகாரம்; காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கைது..!

இந்த தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேர போராட்டத்துக்குப்பின் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பயங்கரமான திடீர் தீ விபத்தில், கட்டிடத்தின் உள்ளே சிக்கிக்கொண்ட 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், இச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on May 28, 2024 01:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).