மே 28, சென்னை (Chennai News): சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் (Temple Priest) கார்த்திக் முனுசாமி என்பவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாலிகிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காந்திநகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி, இந்த பெண் சினிமா வாய்ப்புகளைத் தேடி வந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடவுள் பக்தி அதிகம் உள்ளதால், பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். Minor Girl Gave Birth: குழந்தை பெற்றெடுத்த 16 வயது சிறுமி; ஆசை வார்த்தை கூறி உறவினர் வெறிச்செயல்..!
அப்போது, காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அவரது வீட்டிற்கு செல்ல நேரிட்ட போது, பெண்ணிடம் தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து குடிக்க கொடுக்க, அவரும் குடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் மயக்கம் அடைந்த நிலையில், அர்ச்சகர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், சிறிது காலம் அவருடன் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதுதொடர்பாக, அர்ச்சகர் கார்த்திக் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.மேலும், தலைமறைவாக உள்ள கார்த்திக் முனுசாமியை பிடிக்க காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்நிலையில், அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த இவரை காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சென்னை காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீதான பாலியல் பலாத்கார வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், முன் ஜாமீன் வழங்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை நீதிமன்ற விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.