9ஆம் வகுப்பு மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
சத்தீஸ்கரில் 9ஆம் வகுப்பு மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 04, பிலாஸ்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் (Bilaspur) 9ஆம் வகுப்பு மாணவி, அர்பா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். பிலாஸ்பூரில் உள்ள ராஜ்கிஷோர் நகரில் அதிதி (வயது 14) தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (நவம்பர் 03) இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, வீட்டை விட்டு வெளியேறி, சத்காட் அருகே உள்ள பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டார். GSAT-7R Satellite: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது LVM3-M5 பாகுபலி ராக்கெட்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!
மாணவி தற்கொலை:
இதுகுறித்த தகவல் கிடைத்ததும், சர்கண்டா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இருந்து மாணவியின் உடலை மீட்டனர். இச்சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. குடும்பத்தினர் மற்றும் உடன் பயிலும் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.
(The above story first appeared on LatestLY on Nov 04, 2025 04:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

