Minor Girl Sexual Assault: காரில் கடத்திச் சென்று சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபர் வெறிச்செயல்..!

உத்தர பிரதேசத்தில் 16 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Sexual Assault: காரில் கடத்திச் சென்று சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபர் வெறிச்செயல்..!
Abuse (Photo Credit: Pixabay)

ஜனவரி 21, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், முராதாபாத் (Moradabad) மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் செல்கின்றனர். அந்தவகையில், நேற்று (ஜனவரி 20) காலை வழக்கம் போல் சிறுமியின் பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது, காலையில் வீட்டின் அருகே சிறுமி தனியாக நின்றுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக காரில் வந்த ரஷித் என்ற வாலிபர், சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். Police Encounter: தப்பியோட முயன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை.. பரபரப்பு சம்பவம்..!

சிறுமி பாலியல் வன்கொடுமை:

இதனையடுத்து, சிறுமியை காரிலே வைத்து பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். மேலும், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பின்பு, ஓடும் காரில் இருந்து சிறுமியைக் கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், சிறுமியிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரஷித்தை கைது செய்தனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3

 

(The above story first appeared on LatestLY on Jan 21, 2025 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).