ஜனவரி 21, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஷாம்லி (Shamli) மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் மற்றும் குற்றவாளிகள் கும்பலுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்நிகழ்வு, குற்றவாளிகள் காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு (Encounter) நடத்தி தப்பியோட முயன்றதால் நடந்துள்ளது. இதில், குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர். Son Kills Mother: தாய் அரிவாளால் வெட்டி படுகொலை; கொடூர மகன் கைது..!
சுட்டுக்கொலை:
இந்நிலையில், காவல் அதிகாரி ஒருவர் இதில் படுகாயம் அடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த குற்றவாளிகளில் 3 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டது. அவர்களில் சஹரன்பூரைச் சேர்ந்த அர்ஷத், சோனிபட்டைச் சேர்ந்த மஞ்சீத் மற்றும் சதீஷ் கர்னாலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு குற்றவாளியின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.