ஏப்ரல் 09, சித்தூர் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், புங்கனூர் மண்டலத்தில் உள்ள கமதம்பள்ளி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் என இருவரும், அதே கிராமத்தை சேர்ந்த கணேஷ் என்பவருடன் செங்கல் சூளையில் வேலைக்காக சென்றுள்ளனர். Nutrients In Sesbania Grandiflora: அகத்திக் கீரையில் இவ்வளவு நன்மைகளா..! – விவரம் உள்ளே..!

இந்நிலையில், செங்கல் சூளையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, சிறுமியை மிரட்டிய கணேஷ் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் அழுது கதறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் ஓடி வந்துள்ளார். ஆனால், அதற்குள் கணேஷ் தப்பி சென்றுவிட்டார். இதனையடுத்து, சிறுமியின் தாயார் அவரை மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். தனக்கு நேர்ந்த சம்பவத்தை நினைத்து பார்த்து அழுது மனமுடைந்த சிறுமி செங்கல் சூளை அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை (Hangin Herself In Frustration) செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்த சிறுமியின் தாய் கதறி அழுதுள்ளார்.

இதுதொடர்பாக, புங்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்றுள்ள கணேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.