ஏப்ரல் 09, சென்னை (Health Tips): அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் உள்ளதாக சித்த மருத்துவத்தில் (Siddha Medicine) sகூறப்படுகிறது. இதன் பல பாகங்கள் மூலிகையாகவும் பயன்படுகிறது. அகத்திக்கீரையில் 8.4 விழுக்காடு புரதம், 3.1 விழுக்காடு தாது உப்புக்கள், 1.4 விழுக்காடு கொழுப்பு ஆகியவை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. Floods Surround 10 Thousand Houses: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்; வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்..!

அகத்திக்கீரையில் மாவுச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் 'ஏ' ஆகியவை அடங்கியுள்ளன. சிறிய காயங்களுக்கு இலையை அரைத்து தடவலாம். அகத்திக்கீரை சாறுடன் தேன் கலந்து குழந்தைகளின் உச்சந்தலையில் தடவி வந்தால் தலையில் சேர்ந்து உள்ள நீர் வெளியேறும். பித்தம் சம்மந்தமான நோய்களை தீர்க்க அகத்திக் கீரை சாப்பிடுவது நல்லது, மேலும், இது உடல் சூட்டை தணித்து, உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

இதில், சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இலைகளை காயவைத்து பொடியாக்கி, அதை கலை மாலை குடித்து வர வயிற்றுவலி குறைத்து, மலச்சிக்கலை தீர்க்கும். வாரத்திற்கு ஒரு முறை அகத்திக் கீரையை சாப்பிட்டால் பித்த மயக்கம் குணமாகி, சிறுநீர் கோளாறு பிரச்சனைகள் நீங்கும். தொடர்ந்து 48 நாட்களுக்கு ஒரு முறை அகத்திக் கீரையை சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவாகவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் செய்யும்.