ஆகஸ்ட் 07, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்த ஷிவ்ஜீத் சுரேந்திர சிங் மற்றும் ஜெய் சாவ்தா ஆகியோர் செவித்திறன் மற்றும் பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள். இவர்கள், தங்களது நண்பரான அர்ஷத் அலி சாதிக் அலி ஷேக்கை (வயது 30) கடந்த ஆகஸ்ட் 04-ஆம் தேதி அன்று மாலை, ஜெய் சாவ்தாவின் வீட்டில் நடக்கும் விருந்திற்கு அழைத்துள்ளனர். அங்கு 3 பேரும் மது அருந்திவிட்டு, அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சிங் மற்றும் சாவ்தா ஆகிய இருவரும் சேர்ந்து ஷேக்கை சுத்தியல் (Hammer) மற்றும் கூர்மையான பொருளால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக (Beaten To Death) உயிரிழந்தார். Rahul Gandhi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம்... ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!
இதனையடுத்து, அவரது உடலை சூட்கேசில் அடைத்து, உடலை அப்புறப்படுத்த தாதர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் இருவரும் சூட்கேஸுடன் இருப்பதைக் கண்டு, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் (RPF) சந்தேகமடைந்தார். பின்னர், அதிலிருந்து ரத்தம் கசிவதைக் கவனித்தார். இதனால் அவர்களை தடுத்து நிறுத்தி அந்த சூட்கேஸைத் திறந்து பார்த்த போது உள்ளே சடலம் இருப்பது தெரியவந்தது. உடனே சாவ்தாவை அவர் மடக்கி பிடித்தார். உடன் இருந்த சிங் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இறுதியில் உல்ஹாஸ்நகரில் சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் 3 பேரும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளனர். அதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷேக்கை கொலை செய்துள்ளது தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.