ஆகஸ்ட் 07, பாரிஸ் (Sports News): சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும் (Paris Olympics 2024). 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் ஜூலை 26 அன்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
மல்யுத்த போட்டி: இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருந்த ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத் (Indian wrestler Vinesh Phogat), ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார். அதில் வினேஷ் போகத் 3-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதில் யு சுசாகி 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில் வினேஷ் போகட் (50 கிலோ) உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். Vinesh Phogat Disqualified From Paris Olympics 2024: சுக்குநூறாகிப்போன தங்கப்பதக்க கனவு; ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்..! இந்தியாவே கலங்கியது..!!
தகுதி நீக்கம்: அரையிறுதியில் கியூபாவின் கஸ்மான் லோபசை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் 100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நேரத்தில் குழுவால் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படாது என்றும், வினேஷின் தனியுரிமையை மதிக்குமாறும் இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. மல்யுத்த விதிப்படி போட்டி நடைபெறும் நாள் மற்றும் போட்டிக்கு முந்தைய நாள் போட்டி நடக்கும் எடை அளவிலே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்க பதக்கம் வழங்கப்படும். போட்டியின்றி அவர் தங்க பதக்கம் பெறுவார். வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. மேலும் வெண்கல பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த சங்கம் அறிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் வினேஷ் எப்படியேனும் தங்கப்பதக்கத்தை வென்று அசத்துவார் என ஒட்டுமொத்த இந்திய நாடும் அவரின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்தது. இதனிடையே, அவர் 100 கிராம் எடை பிரச்சனையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது, ஒட்டுமொத்த இந்தியாவையும் கலங்கடித்து இருக்கிறது. PM Modi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்.. பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்..!
ராகுல் காந்தி ட்வீட்: இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Rahul Gandhi) வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “உலக சாம்பியன் மல்யுத்த வீரர்களை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகட், தொழில்நுட்ப காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து, நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வினேஷ் மனம் தளரக்கூடியவர் அல்ல, அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது. நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இன்று உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
विश्वविजेता पहलवानों को हरा कर फाइनल में पहुंची भारत की शान विनेश फोगाट का तकनीकी आधार पर अयोग्य घोषित किया जाना दुर्भाग्यपूर्ण है।
हमें पूरी उम्मीद है कि भारतीय ओलंपिक संघ इस निर्णय को मजबूती से चैलेंज कर देश की बेटी को न्याय दिलाएगा।
विनेश हिम्मत हारने वालों में से नहीं हैं,…
— Rahul Gandhi (@RahulGandhi) August 7, 2024