Money, Sex and Murder: பெண்ணை கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்.. கல்வெட்டு தொழிலாளி வெறிச்செயல்..!
தெலுங்கானாவில் 45 வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த 37 வயது கல்வெட்டு தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 28, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், மேட்சல் (Medchal) மாவட்டம் அருகே முனிராபாத் கிராமத்தில் உள்ள பாதாள சாக்கடையில், எரிந்த நிலையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், பெண்ணை கொடூரமாக கொலை (Murder) செய்த 37 வயது கல்வெட்டு தொழிலாளி கைது செய்யப்பட்டார். கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுத் தொழிலாளி, ஷாமிர்பேட்டையில் வசித்து வந்தார். கொலை செய்யப்பட்ட பெண் போத்தன் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர், தனது கணவருடன் சண்டையிட்டு 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். Wooden Platform Collapse: மர சாரம் சரிந்து விழுந்து பயங்கரம்; 7 பேர் பலி.. 40 பேர் படுகாயம்.., உ.பி-யில் சோகம்..!
பெண் எரித்து கொலை:
இந்நிலையில், குஷாய்குடாவில் வசித்து வந்த இவர், தினசரி கூலி வேலை செய்து வந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி அன்று, அவர் மேட்ச்சலில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றார். அங்கு குற்றம் சாட்டப்பட்டவரான தொழிலாளியை சந்தித்தார். பின்னர், அவர் அந்தப் பெண்ணை பாலியல் உறவுக்கு (Sexual Assault) அழைத்துள்ளார். முதலில் ஒப்புக்கொண்ட தொகையை விட அதிகமாக பணம் கேட்டபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அவர், பெண்ணை கொலை செய்து பின்னர், பெட்ரோலை வாங்கி உடலை எரித்துவிட்டு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.
குற்றவாளி கைது:
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்களின் உதவியுடன், பாதிக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார். பின், சிசிடிவி மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளி நேற்று (ஜனவரி 27) கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

