Wooden Platform Collapse: மர சாரம் சரிந்து விழுந்து பயங்கரம்; 7 பேர் பலி.. 40 பேர் படுகாயம்.., உ.பி-யில் சோகம்..!
பாக்பத்தில் லட்டு திருவிழா நடந்து கொண்டிருந்த போது, திடீரென மர சாரம் சரிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 28, பாக்பத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பாக்பத் (Baghpat) மாவட்டத்தில் ஆதிநாதரின் நிர்வன் லட்டு விழா (Nirvan Ladoo Event) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மானஸ்தம்ப் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு, அதில் செய்யப்பட்ட மரத்தடி திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், பலரது நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. Road Accident: தடுப்புச் சுவரில் மோதி இருசக்கர வாகனம் விபத்து; 3 சிறுவர்கள் பரிதாப பலி..!
மர சாரம் சரிந்து விபத்து:
ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், காயம் அடைந்தவர்களை ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து பேசிய பாக்பத் காவல் கண்காணிப்பாளர் அர்பித் விஜயவர்கியா, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாரௌத்தில் ஜெயின் சமூகத்தின் 'லட்டு மஹோத்சவ்' நிகழ்ச்சியின் போது கண்காணிப்பு கோபுரம் இடிந்து விழுந்தது. சம்பவம் நடந்த உடனே, காவல்துறை நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
வீடியோ இதோ:
Major accident during the Lord Aadinath "Nirvan Ladoo event" in Baraut area in UP's Baghpat district. Several feared trapped and injured after a makeshift wooden log structure at Manstambh premises collapsed.
Warning: Disturbing video. pic.twitter.com/2DTcSuhhKG
— Piyush Rai (@Benarasiyaa) January 28, 2025
(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

