Road Accident CCTV Footage: கல்லூரி மாணவி பேருந்து சக்கரத்தின் கீழே விழுந்து உடல் நசுங்கி பலி; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
ஐதராபாத்தில் பேருந்தின் படிக்கட்டில் நின்ற கல்லூரி மாணவி, தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கிக்கொண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
ஜூன் 14, ஐதராபாத் (Telangana News): தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மதுரா நகர் காவல் நிலையப் பகுதியில் ஆர்டிசி பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவி (College Student Death) ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்து சாலையின் வலைவில் இருந்து வேகமாக திரும்பிய போது, படியில் நின்ற மாணவி, கீழே இறங்க முயன்றது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. Mysterious Gang Theft From Coconut Tree: இளநீரை திருடி குடித்துவிட்டு உரிமையாளருக்கு நூதன வேண்டுகோள்; திருட்டு கும்பல் அடாவடி..!
அவர் நிலை தடுமாறி பேருந்தின் சக்கரத்தில் கீழே விழுந்துள்ளார். பேருந்து அவர் மீது ஏறி இறங்கியது. மாணவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். யூசுப்குடாவில் உள்ள முதுகலை கல்லூரியில் முதலாம் ஆண்டு இடைநிலை படித்த மெஹ்ரீன் என்ற மாணவி உயிரிழந்தார் என அடையாளம் காணப்பட்டது. இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
படிக்கட்டு பயணங்கள் ஆபத்தானவை என்று நாம் அனைவரும் அறிவோம். அந்தவகையில், தற்போது கல்லூரி மாணவி ஒருவர் பேருந்து நிறுத்தம் வரும் முன்னரே படியில் இறங்க முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
సీసీటీవీ ఫుటేజ్
మధుర నగర్ పోలీస్ స్టేషన్ పరిధిలో రోడ్డు ప్రమాదం
ఆర్టీసీ బస్ చక్రాల క్రింద పడి ఓ విద్యార్థిని దుర్మరణం.
యూసఫ్ గూడాలో ఉన్న మాస్టర్స్ కాలేజీలో ఇంటర్మీడియట్ మొదటి సంవత్సరం చదువుతున్న మెహరీన్ అనే విద్యార్థిని మృతి pic.twitter.com/wkiW7kmEla
— Telugu Scribe (@TeluguScribe) June 14, 2024
(The above story first appeared on LatestLY on Jun 14, 2024 04:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

