Human Sacrifice: நோய் குணமாக மனைவி நரபலி; கணவருக்கு ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு..!
உத்தர பிரதேசத்தில் நோய் குணமடைவதற்காக மனைவியை நரபலி கொடுத்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஜனவரி 29, ஹர்டோய் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஹர்டோய் பகுதியை சேர்ந்தவர் கம்லேஷ். இவர், திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், யானைக்கால் நோயால் அவதிப்பட்ட கம்லேஷ், தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டில் கமலேஷின் மாமனார், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தன் மகளை, கம்லேஷ் நரபலி கொடுத்து கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். Crime News: சக தோழியை பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற மாணவி.. மூடி மறைத்த பள்ளி நிர்வாகம் மீது வழக்கு..!
மனைவியை நரபலி கொடுத்த கணவர்:
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பான வழக்கு, மாவட்ட கூடுதல் நீதிபதி அச்சே லால் சரோஜ் முன் நடந்தது. விசாரணையில், யானைக்கால் நோய் குணமாக வேண்டி, பன்றி உள்ளிட்ட விலங்குகளை கம்லேஷ் ஏற்கனவே நரபலி கொடுத்துள்ளது தெரியவந்தது. நோய் குணமாகாத நிலையில், தனது மனைவியையும் கம்லேஷ் நரபலி கொடுத்துள்ளார். இதனையடுத்து, நீதிபதி சரோஜ் அளித்த தீர்ப்பில், மனைவியை கணவர் கம்லேஷ் நரபலி கொடுத்தது விசாரணையில் உறுதியாகியது. எனவே, கம்லேசுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

