A Fake Preacher Abused Minor Girl: மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த போலி சாமியார் – 3 பேர் போக்சோ வழக்கில் கைது..!
Sexual Harassment (Photo Credit: @Sriramrpckanna1 X)

மார்ச் 14, திருமலை (Andhra Pradesh News): ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ரயில்வே கொடூரில் வசித்து வந்த கூலித்தொழிலாளியின் 14-வயது மகள். மகளின் படிப்பிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பே திருப்பதி எம்.ஆர்.பள்ளி பகுதியில் குடியேறினார். இவர் திருப்பதியில் வேலை செய்து வருகிறார். மகள் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். Naked Woman Dead Body: கரும்பு தோட்டத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம் – காவல்துறையினர் விசாரணை..!

மாணவி பள்ளி செல்வதற்காக தினமும் ரயிலில் பயணம் செய்துவந்துள்ளார். அதில், 26 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் மாணவியிடம் தனது பெயர் அபிராம் என்றும், நான் திருப்பதியில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். பின்னர், நாளடைவில் இருவருக்கும் இடையே நல்ல பழக்கம் உண்டாகி, செல்போனில் தினமும் பேசிக்கொண்டுள்ளனர். ஒரு நாள் அபிராம், மாணவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அந்த வாலிபர் அடிக்கடி மாணவியிடம் பணம் கேட்டுள்ளார். இவரும் வீட்டில் இருந்த நகை, பணம் என கொடுத்துள்ளார்.

பலாத்காரம் செய்த போலி சாமியார்: சந்தேகமடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் நடந்ததை கூறியுள்ளார். ஆனால், இதனை நம்பாமல் அவருக்கு ஏதோ பேய் பிடித்திருப்பதாக எண்ணினர். மேலும், அக்கம்பக்கத்தினர் கூறியதன் பேரில் கடந்த மாதம் திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் இருக்கும் ஆசீரமத்திற்கு கூட்டிச் சென்றனர். அங்குள்ள சாமியார் மூர்த்தி சிறுமிக்கு மந்திரம் போடுவது போல நடித்து, மாணவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 நாட்கள் நள்ளிரவு பூஜையில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவியின் பெற்றோர் கடந்த மாதம் 20-ஆம் தேதி நள்ளிரவு பூஜைக்கு கொண்டு சேர்த்தனர். சாமியார் மாணவியை தனி அறைக்குள் அழைத்துச் சென்று அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், மாணவியை மிரட்டி தொடர்ந்து 2-வது நாளும் வர சொல்லியுள்ளார். அப்போது மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் ஷரத், ஷமர் காரில் வெளியே இருந்தனர். மாணவி தந்தைக்கு தெரியாமல் காரில் தப்பி சென்றுள்ளார். தனது மகள் காணாமல் போய்விட்டார் என காஜுலமாண்டியம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில், அவர்கள் இருவரும் நெல்லூர் லாட்ஜில் மூன்று நாட்கள் தங்கிருந்துள்ளனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் மஞ்சிரியாலாவில் உள்ள ராமர் கோவிலில் திருமணம் செய்து, பின்னர் அங்கிருந்து ஐதராபாத்துக்கு சென்று ஒரு வார காலமாக மாணவியை பலாத்காரம் செய்துவந்துள்ளார். திடீரென சந்தேகமடைந்த மாணவி, காதலனுடைய ஆதார் அட்டையை பார்த்த போது அதில் அவனுடைய பெயர் ஷபி என தெரியவந்தது. தன்னை ஏமாற்றிவிட்டான் என அழுது புலம்பி பெற்றோரிடம் தகவலை தெரிவித்துள்ளார். இதன் பிறகு காஜுலமாண்டியம் காவல்துறையினர் மாணவியை மீட்டு, விசாரித்ததில் தனக்கு நடந்ததை கூறினார். இதனையடுத்து, ரேணிகுண்டா காவல்துறையினர் மகளிர் ஆணையம் மற்றும் மகளிர் நீதிபதி முன் கொண்டு சென்றனர். மேலும், மருத்துவபரிசோதனையில் மாணவி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலி சாமியார் மூர்த்தி, ஷபி, ஷமர், ஷரத் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில் போலி சாமியார் மட்டும் தப்பி சென்று தலைமறைவாக உள்ளார். இவர், கோதண்ட ராமச்சாரி என்ற பெயரில் மொரிஷியஸ் நாட்டுக்கு தப்பி சென்றதாக உள்ள தகவலை அடுத்து, அனைத்து விமான நிலையங்களிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.