மார்ச் 14, தண்டராம்பட்டு (Thiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகேயுள்ள ராதாபுரத்தில் வசித்து வரும் பழனிவேல், விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் இவர் கரும்பு பயிரிட்டிருந்தார். நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் கரும்பு அறுவடை செய்வதற்காக அங்கு வந்துள்ளனர். தீடீரென, அங்கு துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த தொழிலாளர்கள் தோட்டத்திற்கு உள்ளே சென்று பார்த்த போது, அழுகிய நிலையில் நிர்வாணமாக பெண் சடலம் கிடந்தது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் நில உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துனர். இதனையடுத்து, பழனிவேல் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் உடனடியாக வந்த காவல் துறையினர் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். Actress Poornima Ravi: புதிய பட வாய்ப்புகள் – மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகை பூர்ணிமா ரவி..!

மேலும், காவல்துறையினர் நடத்திய விசாரணையின் மூலம் கொலையானவர் தண்டராம்பட்டு ஊராட்சி டேம் சாலை பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் ராஜேஷ்வரி (வயது 30) மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி அன்று காணவில்லை என புகார் அளித்தும், தற்போது அவர் கொலையுண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், உடல் நிர்வாணமாக கிடந்ததால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.