Dead Body (Photo Credit: Pixabay)

ஜனவரி 20, ராமநகர் (Karnataka News): கர்நாடக மாநிலம், மாண்டியா (Mandya) மாவட்டத்தில் உள்ள மலவள்ளியின் பலேஹோன்னி கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா கவுடா (வயது 25). பொறியாளரான இவர், கடந்த ஒரு வருடமாக ராமநகர் மாவட்டம், கனகபுராவின் சாத்தனுார் பஞ்சாயத்தில், பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 18) மாலை பணி முடித்துவிட்டு, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பசாபுரா கேட் அருகே எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதி (Bike Accident) விபத்துக்குள்ளானது. Saif Ali Khan: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது; மும்பை காவல்துறை அதிரடி.!

இளம்பெண் பலி:

இதில், அவர் கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக, தகவல் அறிந்து வந்த ஹலகூரு காவல்துறையினர், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு, இருசக்கர வாகனத்தில் வந்தவரும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த சரண்யாவுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி 16) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.